இந்தியாவின் முன்னணி வங்கி சேவைகளில் ஒன்றான SBI கார்டு, தனது வாடிக்கையாளர்களுக்கான கார்டு பாதுகாப்புத் திட்டம் (Card Protection Plan – CPP)-ஐ புதிய வடிவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இத்திட்டம் 2025 செப்டம்பர் 16 முதல் அமலுக்கு வரும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும், செலவுகளையும் கருத்தில் கொண்டு, SBI கார்டு கட்டணங்களை குறைத்து, சேவைகள் மற்றும் நன்மைகளை விரிவுபடுத்தியுள்ளது.
CPP திட்டம் என்ன?
CPP என்பது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ அல்லது மோசடி பரிவர்த்தனைகள் நடந்தாலோ, வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாக்கும் விரிவான சேவை. இது ஒரு “பைனான்ஷியல் பாதுகாப்பு ” மாதிரி செயல்படுகிறது.
ஒரே அழைப்பில் அனைத்து கார்டுகளும் பிளாக்:
வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு தொலைந்தால், ஒரு தொலைபேசி அழைப்பிலேயே எல்லா கார்டுகளையும் உடனடியாக நிறுத்தும் வசதி.
மோசடிக் காப்பீடு
ஃபிஷிங், டெலி-ஃபிஷிங் அல்லது OTP இல்லாமல் நடந்த மோசடி பரிவர்த்தனைகளுக்கு ரூ.3 லட்சம் வரை காப்பீடு.
அவசர பயண உதவி
வெளிநாட்டு பயணங்களில் அவசர நிதி தேவைப்பட்டால், ரூ.1.6 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது.
மொபைல் வாலெட் பாதுகாப்பு
ஸ்மார்ட்போன் தொலைந்தால், அதிலிருந்து ஆன்லைன் வாலெட்டில் பணம் திருடப்பட்டதற்கும் ரூ.50,000 வரை பாதுகாப்பு.
ஆவண உதவி
பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற தேவையான ஆவணங்கள் தொலைந்தால், அவற்றை மீண்டும் பெற உதவி.
குறைந்த கட்டணத்தில் அதிக நன்மைகள்
முந்தைய பிளான் கட்டணங்கள் அதிகமாக இருந்த நிலையில், இப்போது SBI கார்டு அவற்றை குறைத்து புதிய தொகுப்புகளாக வழங்குகிறது:
கிளாசிக் திட்டம்– ₹999 (முந்தைய ₹1199/₹1899-க்கு பதிலாக)
பிரீமியம் திட்டம் – ₹1499 (முந்தைய ₹2499-க்கு பதிலாக)
பிளாட்டினம் திட்டம் – ₹1999 (முந்தைய ₹3199-க்கு பதிலாக)
இதன் மூலம், வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் அதிக பாதுகாப்பு பெற முடிகிறது.
CPP திட்டத்தில் சேர்வது எப்படி?
சேரும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திய பின், வாடிக்கையாளர்கள் ஒரு வரவேற்புப் பெட்டி பெறுவார்கள். அதில் உள்ள பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். அல்லது, CPP கால் சென்டரை தொடர்பு கொண்டு, தேவையான ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த CPP திட்டம் ஒரு பாதுகாப்பானவும், குறைவு செலவுகளோடும் கூடிய சிறந்த முன்னேற்றமாக உள்ளது. 2025 செப்டம்பர் 16 முதல் செயல்படும் இந்த புதிய மாற்றங்கள், வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பு பயணத்தில் ஒரு உறுதியான துணையாக இருக்கும்.