மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை வருவதையொட்டி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக, பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
அதன் முதல் மாநாடு, நெல்லையில் இன்று நடைபெறுகிறது. தச்சநல்லூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை வருகிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாநகரம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.