முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக விளங்கும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதற்கு ராணுவ வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். இதற்கு 30 சதவீத மானியம் வழங்கப்படும். மேலும் கடன் தொகைக்கு 3 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். அதுமட்டுமின்றி முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தொழில் முனைவோராகும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 400 முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை https://exwel.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஏற்கெனவே மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் இதைப் போன்ற திட்டங்களில் பயன் பெற்றிருக்கக் கூடாது.