மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே சத்யமூர்த்தி நகர் பகுதியில் நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கையான சுத்திரிக்கப்பட்ட ஆரோ வாட்டர் அமைப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆரோ வாட்டர் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது :
நான் சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகுதான் இந்த பறவை பேரூராட்சி பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். எனது உறவுகள் எனது குடும்பமாக மேற்கு தொகுதி மக்களை நினைக்கிறேன்.
என்னுடைய வளர்ச்சிக்கும், என்னுடைய பேச்சிருக்கும் என்றும் துணையாக இருப்பது இந்த மேற்கு தொகுதி மக்கள்தான். எப்போதும் எனது உயிர் உள்ளவரை உங்களுக்காக சேவையாற்றுவேன்.
தேர்தல் வருவதால் சில பேர் திருவிழாவுக்கு வருவது போல வருவார்கள். வந்துவிட்டு செல்வார்கள். அவர்களின் வருகை அதிகமாக இருக்கு அவர்களைப் போல நாங்கள் கிடையாது. வாக்குறுதி கொடுத்தால் மக்களுக்காக செய்து கொடுப்போம். தொடர்ந்து அதிமுகவிற்கு உங்களுடைய பேராதரவு தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.