இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ஜொலித்த ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றனர். தற்போது அவர்களுடைய ஒருநாள் போட்டி குறித்து பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்சன் காவ்ரி, ரோகித் சர்மா, விராட் கோலியின் ஓய்வுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது : விராட் கோலியின் திடீர் ஓய்வு ஒரு மர்மம். அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து விளையாடியிருக்கலாம். ஆனால், ஏதோ ஒன்று அவரைக் கட்டாயப்படுத்தி ஓய்வபெறச் செய்துள்ளது. விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இந்திய அணி நிர்வாகத்தின் உள்நாட்டு அரசியலுக்குப் பலியாகிவிட்டனர். பிசிசிஐக்குள் நடைபெறும் உள்நாட்டு அரசியல் புரிந்து கொள்ள முடியாதது. இதுவே விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.