நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக தமிழகத்தைச் சேர்ந்தவரும் திமுக மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.