தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் இயக்கப்படும் ரயில்களில் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் தேவையின்றி அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தியதாக 96 பேர் மீது ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் வழக்கு பதிந்துள்ளனர்.
நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் 210 பேர் மீதும், 2024-ல் 217 பேர் மீதும் வழக்குகள் பதியப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.