நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், புகைப்பிடித்த குற்றச்சாட்டில் தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
குவைத்தில் இருந்து 144 பயணிகளுடன், சென்னை வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், தஞ்சாவூரை சேர்ந்த சேக் முகமது என்ற 28 வயது இளைஞர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது புகைப்பிடித்துள்ளார்.
அடிக்கடி கழிவறை எழுந்து சென்று இளைஞர் புகைப்பிடித்த நிலையில், அவர் மீதிருந்து எழுந்த சிகரெட் வாசத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சென்னையில் தரையிறங்கியதும் இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் புகாரளித்த நிலையில், இளைஞரை சென்னை விமான நிலைய காவலர்கள் கைது செய்தனர்.