Thursday, January 15, 2026

ரெய்னாவை சுத்து போட்ட அமலாக்கதுறை! விசாரணைக்கு நேரில் ஆஜர்

கடந்த சில காலமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பலரும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்தி வருகின்றனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகைகள் நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தொடர்பில் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது. அதன்படி, சுரேஷ் ரெய்னா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Related News

Latest News