செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே முதுகரை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், கோடை விடுமுறையின்போது தனது பெற்றோரால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
13 வயது மாணவி, தனது தாயும், அவரது 3-வது கணவரும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், தன்னை பல ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பள்ளி ஆசிரியரிடம் கூறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், குழந்தைகள் உதவி மையம் மற்றும் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியின் தாய், மூன்றாவது கணவர் முருகனுடன் வாழ்ந்து வந்ததாகவும், இவர் மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட 40க்கும் மேற்பட்ட ஆண்களிடம் அனுப்பி பணம் சம்பாதித்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளியதாக மாணவியின் தாயார், அவரது 3-வது கணவர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.