Thursday, January 15, 2026

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்தார். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகினார்.

இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related News

Latest News