இந்திய கிரிக்கெட்டின் ‘ரன் மெஷின்’, ‘கிங் கோலி’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட அந்தப் புகைப்படத்தில், கோலியின் தாடி முழுவதும் நரைத்து, அடையாளம் காண முடியாத அளவுக்கு அவரது தோற்றம் மாறியுள்ளது. இது, “ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போகிறாரா?” என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், இந்த ஆண்டு மே 12 அன்று யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் கோலி தனது ஓய்வை அறிவித்தார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, “கிங் கோலிக்கு என்ன ஆனது?” என ரசிகர்கள் கவலையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.