வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ; தமிழகத்தில் 500 இடங்களில் சார்ஜிங் மையங்கள்

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சுமார் 500 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க பசுமை எரிசக்தி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதில், முதல் கட்டமாக சென்னை முதல் கோயம்புத்தூர் வரையிலும், சென்னை முதல் கன்னியாகுமரி வழித்தடத்திலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்கள் அமைப்பது மட்டுமின்றி ஏற்கெனவே உள்ள தனியார் சார்ஜிங் மையங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை தீர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related News

Latest News