பெரும்பாலான பிரஷர் குக்கர்கள் அலுமினியம் மற்றும் துருப்பிடிக்காத எஃகு (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அலுமினியம் என்பது உணவுக்குச் சில அளவு கலக்கக்கூடிய உலோகமாகும். அமிலத்தன்மையுடைய தக்காளி, புளி போன்ற உணவுகளை அலுமினிய குக்கரில் சமைக்கும் போது அலுமினியத் துகள் உணவில் கலந்து, உடல் நலம் பாதிக்கப்படக் கூடும்.
இதனால் புற்றுநோய், அல்சைமர் நோய் போன்ற விளைவுகள் ஏற்படலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. அலுமினிய குக்கர்களை நீண்டகாலமாக தொடர்ந்து பயன்படுத்தி வரும்பொழுது அவற்றின் பாதுகாப்பு பூச்சு தேய்ந்து அலுமினிய துகள்கள் உணவில் கலக்கப்படும். இவற்றைத் தவிர்க்க, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தேர்வாக துருப்பிடிக்காத எஃகு (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) குக்கர்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
அலுமினியம் குக்கர்களை நீண்ட காலம் பயன்படுத்துவது சில உடல் நல அபாயங்களைத் தரலாம் என்ற ஆய்வுகள் இருந்தாலும், இவை மருத்துவ ரீதியில் உறுதிபடுத்தப்படவில்லை. எனவே பாதுகாப்பாக இருக்க புதிய துருப்பிடிக்காத எஃகு குக்கர் வாங்கி பயன்படுத்துவது நல்லது.