Wednesday, July 30, 2025

‘நாங்க என்ன செய்யணும்னு நீங்க சொல்லாதீங்க’ ; கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணியினர் ஓவல் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணியினரிடம் ஓவல் மைதான கண்காணிப்பாளர் எதோ கூறியதாக தெரிகிறது. இதனால் கடுப்பான தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், மைதான கண்காணிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல தேவைவில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களிடம் சொல்ல முடியாது. நீங்கள் ஒரு மைதான கண்காணிப்பாளர். எனவே நீங்கள் மைதான கண்காணிப்பாளர் போல இருங்கள்” என்று கவுதம் கம்பீர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News