சீமானுக்கு பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாஸ்போர்ட் மாயமாகி விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

Related News

Latest News