Thursday, February 5, 2026

இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதமுகாம்கள் அழிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு சொந்தமான ராணுவ விமானங்கள், பொது போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்தது.

இந்நிலையில் இந்த தடை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News