இதுக்கு ஒரு முடிவே இல்லையா?? நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்

டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலையத்தின் ரன்வேயில் ஓடுபாதையில் தரையிறங்கும் இடத்துக்கு முன்பே விமானம் தரையிறங்கியுள்ளது. மீதமுள்ள ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை மீண்டும் டேக் ஆப் செய்தனர்.

பின்னர், விமானம் மூன்று முறை வானில் வட்டமிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது. இதனால், விமானத்தில் இருந்த 173 பயணிகளும் நூழிலையில் உயிர் தப்பினர்.

Related News

Latest News