தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை : இன்றைய நிலவர்ம என்ன?

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 124 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News