உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் என்று அறியப்படுபவர் பௌஜா சிங். 114 வயதான இவர் பஞ்சாபில் உள்ள தனது சொந்த கிராமத்தில், நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் பெளஜா சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.