ஒடிசா மாநிலம் பாலசோர் நகரில் உள்ள ஃபக்கீர் மோகன் சுயாதீனக் கல்லூரியில் பி.எட் இரண்டாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவி, பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரில் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் மாணவியிடம் புகார் வாபஸ் பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குற்றம் சாட்டினார்.
புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், கடந்த சனிக்கிழமை கல்லூரி முதல்வரின் அறை அருகே அவர் தீக்குளித்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்த, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் மோகன் சரண் மாஜி மாணவியின் குடும்பத்தையும் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை என்று உறுதியளித்தார்.