பீகார் மாநிலத்தின் முக்கியமான விமான நிலையமான பாட்னா விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு தீவிர சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அது வதந்தி என்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக அனைத்து விமான சேவைகளும் சிறிது நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.