அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதள கணக்குகளை மீட்க கோரி பாமக புகார்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

நேற்று விருத்தாசலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், லண்டனில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி எனது வீட்டில் யாரோ ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில் அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரி டி.ஜி.பி யிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். எக்ஸ் மற்றும் பேஸ்புக் கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளன. அதை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளன என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News