திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ளது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி அரசினர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் சென்ற பேருந்தில் எறியுள்ளனர். அப்போது கல்லூரி மாணவர்கள் பின்பக்க பேருந்தில் ஏறும் பொழுது மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தையில் திட்டி விட்டு பேருந்து பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மோகன் திருத்தணி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார் புகார் அளித்தார். விரைந்து வந்த திருத்தணி காவல் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பேருந்து பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்ற மாணவன் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.