கோவை குண்டுவெடிப்பு சம்பவம் : 27 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது

கடந்த 1998-ம் ஆண்டு பிப்.14-ந்தேதி கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பாஜக தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக இந்த சம்பவம் நடைபெற்றது.

இந்நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சாதிக் என்ற டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

Latest News