Thursday, February 5, 2026

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான விமானநிறுவனம் விற்பனைக்கு வருகிறது

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான ஏர்லைன்ஸ் விமானநிறுவனம் விற்பனைக்கு வருகிறது.

பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவிக்கும் நிலையில், அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானநிறுவனமும் கடுமையான நிதி சிக்கலில் மாட்டியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு 7 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானநிறுவனத்தை விற்கும் முயற்சியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கான ஏலத்தில் பங்கேற்க 4 உள்ளூர் நிறுவனங்கள் தகுதி பெற்றிருப்பதாக தனியார்மயமாக்கல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர்முத டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஏலம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News