குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள 45 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் இன்று (ஜூலை 9, 2025) காலை சுமார் 7:30 மணியளவில் இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த 4 வாகனங்கள் நதியில் விழுந்தது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), தீயணைப்பு மற்றும் போலீஸ் படையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பால விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.