மகாராஷ்டிரா மாநிலம் புனே ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை இளைஞர் ஒருவர் காந்தி சிலையை உடைக்க முயன்றார்.
இதை கவனித்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த இளைஞர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுராஜ் சுக்லா (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்களுக்கு சிறையில் அடைத்தனர்.