இந்தியா நடத்துற IPL தொடருக்கு ரசிகர்கள் மத்தியில எக்கச்சக்க வரவேற்பு. இதுக்கு காரணம் உலகத்தோட சிறந்த வீரர்கள் பலரும் இதுல கலந்துகிட்டு விளையாடுறது தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம், நியூசிலாந்துன்னு எல்லா நாட்டு வீரர்களும் கலந்துக்கிட்டாலும், பாகிஸ்தான் வீரர்கள் மட்டும் இதுல விளையாடுறது இல்ல.
அதுக்காக ஒரேயடியா பாகிஸ்தான் வீரர்கள், இதுல விளையாடுறதே இல்லைன்னும் சொல்ல முடியாது. ஏன்னா 2008ம் வருஷம் IPL தொடர்ல அவங்க கலந்துக்கிட்டு விளையாடுனாங்க. அதுக்கு அப்புறம் ரெண்டு நாட்டுக்கும் நடுவுல நடந்த அரசியல் பிரச்சினைகளால, பாகிஸ்தான் வீரர்கள் 2009ம் வருஷத்துல இருந்து IPL தொடர்ல கலந்துக்கல.
நெலமை இப்படியிருக்க பாகிஸ்தான் நாட்டு வீரர் மொஹம்மது அமீர், 19வது IPL ஏலத்துல கலந்துக்க போறதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்காரு. அப்படி அவர் கலந்துக்கிட்டா யாராலயும் அவரை தடுக்க முடியாது. ஏன் அவர தடுக்க முடியாது? அதுக்கு என்ன காரணம்னு இங்கே பாக்கலாம்.
அதாவது முஹமது அமீரோட மனைவி இங்கிலாந்து நாட்டோட குடியுரிமை பெற்றவங்க. அதனால அமீரும் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பிச்சு இருக்கார். குறிப்பா அமீர் இப்போ இங்கிலாந்து நாட்டுல தான் இருக்காரு. அவருக்கான குடியுரிமை இன்னும் சில மாசத்துல கெடைச்சிரும்னு சொல்லப்படுது. அப்படி இங்கிலாந்து நாட்டுக்காரரா மாறிட்டா தாராளமா, IPL ஏலத்துல அவர் பங்கு பெறலாம்.
ஏன்னா இதுக்கு முன்னால பாகிஸ்தான்ல பொறந்து, அமெரிக்கா குடியுரிமை வாங்கிய முஹம்மது அசான் அலிகான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருக்காரு. இதேபோல மற்றொரு வீரர் அசார் மொஹம்மது இங்கிலாந்து குடியுரிமை வாங்கி பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகளுக்காக ஆடி இருக்காரு.
So இங்கிலாந்து நாட்டோட குடியுரிமை கெடைச்சிட்டா அமீர் IPL ஏலத்துல கலந்துக்குறத யாராலயும் தடுக்க முடியாது. Left hand பவுலரான அமீர் இப்போ உச்சக்கட்ட பார்ம்ல இருக்கதால, ஏலத்துல இவரை எடுக்குறதுக்கு மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா அப்புறம் பெங்களூரு அணிகள் கடுமையா போட்டி போடலாம்னு எதிர்பார்க்கப் படுது.
ஒருவேளை அமீர் ஏலத்துல கலந்துக்கிட்டா அவரை எந்த Team வாங்குவாங்கன்னு நீங்க நெனைக்குறீங்க? அப்படிங்கிறத கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க.