மதுரையை சேர்ந்த சுதர்ஷன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சுதர்சன் கடந்த 2024 மார்ச் 1-ஆம் தேதி மருத்துவா் விமலாதேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தில் விமலாதேவியின் பெற்றோர் 30 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வரதட்சிணையாக கொடுத்தனர்.
சுதர்சன் தனது மனைவியிடம் மேலும் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் வரதட்சிணையாக கேட்டுள்ளார். இதையடுத்து, கடந்த மாா்ச் 6-ஆம் தேதி விமலாதேவியின் தந்தை, சுதா்சனை வீட்டுக்கு வரவழைத்து, அவரிடம் ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தன்னிடம் மேலும் 20 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூபர் சுதர்சன் மற்றும் குடும்பத்தினர் மீது அவரது மனைவி விமலா தேவி கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
20 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கொடுத்தால் தான் வாழ முடியும் என ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக விமலா தேவியின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.