உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவின் கோமதி நகர் பகுதியில் நபர் ஒருவர், பாலில் எச்சில் துப்பி மக்களுக்கு விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அந்த வீட்டு வாசலில் உள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை பார்த்த அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கோமதி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.