Saturday, July 5, 2025

“கொள்கை எதிரியான பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது” : விஜய் திட்டவட்டம்

த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-

பாஜக உடன் என்றும் கூட்டணி இல்லை. கொள்கை எதிரியான பாஜக உடன் நேரடியாகவே, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.

பாஜக உடன் கூட்டணி வைக்க த.வெ.க. ஒன்றும் அதிமுக, திமுக கிடையாது.

திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் இல்லை.

த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

சட்டசபை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்.

சட்டசபை தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பவர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம்.

ஆகஸ்ட் மாதத்தில் 2-வது மாநில மாநாடு நடத்தப்படும். சட்டசபை தேர்தலில் விஜய் முதலமைச்சர் வேட்பாளர். சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news