ஒடிசா மாநிலத்தில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் அரசு அதிகாரி ரத்னாகர் சாஹூவை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சி கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூவை அவரது அலுவலகத்தில் இருந்து இழுத்துச் சென்று, பிரதான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கி, காலால் எட்டி உதைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்த வழக்கில் ஒடிசா மாநில பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.