Friday, July 4, 2025

கா்நாடகாவில், 10-ஆம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு

கா்நாடக மாநிலம் சாமராஜ்நகா் மாவட்டம் எணகும்பா எனும் கிராமத்தில், இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, 10 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தமிழ் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல் கல்வெட்டு 116 செண்டி மீட்டர் உயரம் மற்றும் 83 செண்டி மீட்டர் நீளம் கொண்டுள்ளது. 20 வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு மூன்று அடுக்குகளை கொண்டுள்ளது. தமிழ் கல்வெட்டு இருக்கும் இடத்திலிருந்து 410 மீட்டர் தொலைவில் கிராமத்துக்கு மேற்கே மேலும் மூன்று நடுகற்களில் கன்னட மொழி கல்வெட்டுகள் உள்ளதாக தொல்லியல் துறை மைசூரு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news