Friday, July 4, 2025

அமைச்சராகிறார் அண்ணாமலை? மத்திய அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றம்?

மத்திய அமைச்சரவையில் கூடிய சீக்கிரத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுவது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தேசிய தலைவர்களை கட்சி தலைமை, தற்போது மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் அமைச்சரவையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்து, குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு தேர்தல் தொடர்பான பொறுப்புகள் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹரியானாவைச் சேர்ந்த டாக்டர் சுதா யாதவ் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுவது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news