பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்கிறார்.
கோடகா விமான நிலையத்தில் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கானாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. கானா அதிபர் ஜான் தர்மனி மஹாவாவிடம் இருந்து இந்த விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.