Thursday, July 3, 2025

இரண்டு மடங்கு உயர்கிறது ஓலா, உபர் கட்டணம்.., கேன்சல் செய்தால் அபராதம்

இன்றைக்கு சொந்தக் காரை விடை ஓலா, உபர் வாகனங்கள் மிகவும் நமக்கு பயன் அளிக்கின்றன. நகர்புறங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஓலா, உபர் ஆப் (செயலி) வாயிலாக பலரும் வாகனங்களை புக் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், ஓலா, உபர் கட்டணத்தை இரண்டு மடங்கு அதிகரிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

பீக் அவர் அல்லாத நேரங்களில், சேவை நிறுவனங்கள் அடிப்படை கட்டணத்தின் குறைந்தபட்சம் 50% வரை கட்டணம் குறைத்து வசூலிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுநர் அல்லது பயணி செல்லும் பயணத்தை காரணமில்லாமல் ரத்து செய்தால், கட்டணத்தின் 10% (அதிகபட்சம் ரூ.100) வரை அபராதம் விதிக்கப்படும். இதே போல சவாரியை கேன்சல் செய்தால் பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news