வாகன விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை தடுக்கவும் சென்னையில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதில் சிக்கும் இளைஞர்கள் மற்றவர்களை காப்பாற்றும் நோக்கில் ஒரு நூதன வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுகிறார்களோ அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கூகுள் மேப்பில் ஜியோ டேக் வசதியை பயன்படுத்தி, போலீஸ் நிற்கும், போலீஸ் இருப்பாங்க பாத்து போங்க, உள்ளிட்ட கோர்ட் வேர்டுகள் மூலம் டேக் செய்கின்றனர்.
இதனால் அப்பகுதியை கடக்கும் இளைஞர்கள் காவல்துறை சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதை குற்றச் செயலில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறும் காவலர்கள் கூறுகின்றனர்.