போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சிக்கினார்கள். இவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக பிரதீப், கெவின் ஆகிய 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் முன்னணி தமிழ் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்து வரும் அந்த நடிகை இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
போதைப்பொருள் வழக்கில் முன்னணி நடிகை மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.