இந்தியாவில் விற்பனையை நிறுத்திய பேனசோனிக் நிறுவனம்..!!

ஜப்பானை சேர்ந்த முன்னணி மின்னணு சாதன நிறுவனமான பேனசோனிக், இந்தியாவில் தனது வாஷிங் மெஷின் மற்றும் குளிர்சாதன பெட்டி (ரெஃப்ரிஜிரேட்டர்) விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக இந்த பொருட்களின் விற்பனை குறைந்ததாலும், கடும் போட்டி காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநிலம் ஜஜார் பகுதியில் உள்ள பேனசோனிக் ஆலையில் இந்த தயாரிப்புகளின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங் மெஷின் மற்றும் குளிர்சாதன பெட்டி வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, சர்வீஸ் மற்றும் வாரண்டி சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News