Thursday, February 5, 2026

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது : ஈரான் உச்சபட்ச தலைவர் எச்சரிக்கை

கடந்த 10 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக போரில் களமிறங்கி, ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan), நடான்ஸ் (Natanz) ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், “இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது. அதன் தவறுக்கான தண்டனை தொடரும்,” என ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தாக்குதல் குறித்து அவர் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News