Wednesday, July 30, 2025

தடுப்பு சுவரில் மோதி கடைக்குள் புகுந்த பேருந்து

அச்சரப்பாக்கத்தில் அதிவேகமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதி கடைக்குள் புகுந்த பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பெருக்கரணை கிராமத்தை நோக்கி தனியார் தொழிற்சாலை பேருந்து ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.

அப்போது திடீரென சாலை தடுப்பு சுவற்றில் மோதிய பேருந்து, கடைக்குள் புகுந்து நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உட்பட மூவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News