Thursday, January 15, 2026

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அதிகமான சதங்களை அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

எம்.எஸ். டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 144 இன்னிங்சில் பேட்டிங் செய்து 4876 ரன்கள் அடித்துள்ளார். 33 அரைசதம் அடித்துள்ளார்.

ரிஷப் பண்ட் இந்த போட்டிக்கு முன்னதாக 43 போட்டிகளில் 75 இன்னிங்சில் பேட்டிங் செய்து 2948 ரன்கள் அடித்துள்ளார். இதில் 6 சதம், 15 அரைசதம் அடங்கும். தற்போது 7ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். முன்னதாக எம்.எஸ். டோனி 6 சதம் அடித்துள்ளார். இதுதான் அதிகபட்ச சாதனையாக இருந்தது.

Related News

Latest News