ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் மதுரை அரசு தொடக்க பள்ளி..!!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மோதகம் ஊராட்சிக்குட்பட்ட எம்.கரையாம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த ஒரு மாணவருக்காக ஓர் ஆசிரியர் மாற்றுப் பள்ளியிலிருந்து இடமாறுதலில் வந்துள்ளார். இந்த ஒரு மாணவருக்கு மதிய உணவு சிட்டுலொட்டிபட்டி பள்ளியிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

தமிழக அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கரையாம்பட்டி கிராமத்தினர் கூறுகின்றனர்.

Related News

Latest News