”இஸ்ரேலிடம் இல்லை என்றாலும்” வரிந்துகட்டி களத்தில் ‘குதித்த’ ஜெர்மனி

இஸ்ரேல் – ஈரான் இடையிலான தாக்குதல்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் சூழ்நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களின் ஆதரவு யாருக்கு? என்று வெளிப்படையாக அறிவித்து வருகின்றன. அந்தவகையில் ஜெர்மனி தங்களின் ஆதரவு இஸ்ரேலுக்கு தான் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி நாட்டின் சான்சிலர், பிரீட்ரிக் மெர்ஸ் அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ” இஸ்ரேல் நமக்கும் சேர்த்து தான் ஈரானிடம் சண்டை செய்கிறது. அதன் முந்தைய பலத்துக்கும், வலிமைக்கும் ஈரான் திரும்புவது கடினம்தான். ஈரானின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது. நாம் காத்திருந்து அதைப் பார்க்கலாம்.

பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முழுமையான அழிவைச் சந்திக்க நேரிடும். ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை அழிப்பதற்கான இராணுவத் திறன் இஸ்ரேலிடம் இல்லை என்றாலும், அமெரிக்காவிடம் இருக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் வழக்கத்தைப்போல் மீண்டும் இராஜதந்திர உதவியை வழங்கத் தயாராக இருக்கிறோம்,” இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் தலைமை பலவீனம் அடைந்துள்ளதாக, பிரீட்ரிக் மெர்ஸ் தெரிவித்து இருக்கிறார். ஆனால் ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலை சல்லடையாக துளைத்து வருகின்றன. இஸ்ரேலின் சக்திவாய்ந்த அயன் டாமாலும் கூட, ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News