திடீர் நெஞ்சுவலி..,, பாமக எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருளுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்திக்க சென்னை தலைமைச் செயலகம் வந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவரின் உதவியாளர்கள் உடனடியாக தலைமைச் செயலக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related News

Latest News