திருப்பூரில் நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் தூய்மை பணியாளர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் இந்த அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலில் ஏற்பட்ட காயத்துடன் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் காயத்தை சுத்தம் செய்து கட்டு போடும் பணியை அங்கிருந்த பெண் தூய்மை பணியாளர் செய்துள்ளார்.

பெண் தூய்மை பணியாளர் ஒருவர் காயத்துடன் வந்த நபருக்கு சிகிச்சை அளிக்கும் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News