இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம் போட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டி அளித்த இஸ்ரேல் பிரதமர் : “ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளார். டிரம்ப் தங்களது அணு சக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டு உள்ளது என கூறியுள்ளார்.