பிரபல ரவுடியும் பாஜக நிர்வாகியுமான வெங்கடேசன் கைது

சென்னை பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய் பொடி வெங்கடேசன். இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு தமிழக பாஜகவில் ஓபிசி பிரிவு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரௌடி மிளகாய்ப் பொடி வெங்கடேசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து மிளகாய் பொடி வெங்கடேசனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News