Tuesday, July 29, 2025

”மொத்தமா ‘முடிச்சு’ விட்டுட்டீங்க” ‘யாரை’ சொல்கிறார் ரவி சாஸ்திரி?

‘மழை விட்டும் தூவானம் விடாத’ கதையாக, இந்திய அணிக்கான புதிய டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்த பின்னரும், BCCIக்கு எதிரான விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தான், இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணமாகி உள்ளது.

அண்மையில் பேசிய இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ” ஷ்ரேயாஸ் அய்யர் நல்ல பார்மில் இருந்தும் அவரை ஏன் எடுக்கவில்லை?,” என்று, சரமாரியாக கேள்வி எழுப்பினார். தற்போது இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலிக்கு BCCI மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாக பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி, ” விராட்டின் ஓய்வினை BCCI சரியாக கையாளவில்லை. அவரிடம் நல்ல தகவல் தொடர்பை BCCI ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். என்ன காரணத்திற்காக அவர் ஓய்வினை அறிவித்தார் என்று BCCI விசாரிக்கவில்லை.

அவரது முடிவினை அப்படியே ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின்னர், விராட் கோலியை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக்கி இருப்பேன்,” என்று வருத்தம் தெரிவித்து உள்ளார்.

நல்ல Fitness உடன் இருக்கும் விராட், இன்னும் 2 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் BCCIயின் உள்ளடி வேலைகளால் மனம் வெறுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக விராட் விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News